குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கேதார்நாத் பயணம், மோசமான வானிலை காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டது.
உத்தராகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயில், இமயமலையின் கார்வால் தொடரில் 3,851 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழிபடுவதற்காக பிரணாப் நேற்று புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் கோயில் அருகில் தரையிறங்க முடிய வில்லை. விமானி மீண்டும் முயன்றும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இதை யடுத்து பிரணாப் டேராடூன் திரும்பி னார். பின்னர் அவர் தனது கேதார்நாத் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பருவமழை நேற்று தொடங்கிய தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.