இந்தியா

மாவோயிஸ்ட்களை ஒடுக்க சிஆர்பிஎப் படைப்பிரிவுக்கு 743 பழங்குடியினர் தேர்வு

பிடிஐ

மாவோயிஸ்ட்களை ஒடுக்க சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் இருந்து 242 பெண்கள் உட்பட 743 பழங்குடியினர் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்ட்களின் தாக்குத லில் கடந்த ஏப்ரல் மாதம் 25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, மாவோயிஸ்ட் களால் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வீரர்களை சிஆர்பிஎப் தேர்வு செய்துள்ளது. அதன்படி பஸ்தார் மண்டலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 242 பெண்கள் உட்பட 743 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘பழங்குடியினத்தைச் சேர்ந்த 743 பேர் சிஆர்பிஎப்-ன் ‘பஸ்தாரியா’ பட்டாலியன் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

சிஆர்பிஎப் படைப்பில் உள்ள ‘பஸ்தாரியா’ பட்டாலியனில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பர்.

மாவோயிஸ்ட்களின் திட்டங் கள், அடுத்த நகர்வுகள் பற்றி உள்ளூர் இளைஞர்கள் மூலம் அறிந்து கொள்வது எளிது. மேலும் மொழிப் பிரச்சினை இருக்காது என்பதாலும் அவர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாகவும் ‘பஸ்தாரியா’ படைப்பிரிவில் பழங்குடி இளைஞர் கள் அதிகமாக சேர்க்கப்படு கின்றனர்.

SCROLL FOR NEXT