இந்தியா

விரும்பிய குழந்தையை தத்தெடுக்க முடியாது: புதிய விதி இன்று முதல் அமல்

பிடிஐ

இந்தியாவில் தேசிய தத்தெடுப்பு ஆணையத்தின் மூலம் (கேரா) ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுக்கலாம். அதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 3 குழந்தை களை பரிந்துரை செய்வார்கள். அவர்களில் ஒரு குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிமேல் ஒரு குழந்தையை மட்டுமே தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது. இந்த விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து கேரா தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் தீபக் குமார் நேற்று கூறியதாவது:

ஆதரவற்ற பல குழந்தைகள் தத்தெடுக்கப்படாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும் நிலை உள்ளது. அதேசமயம் தத்தெடுக் கும் எண்ணிக்கையும் மிக குறைவாக உள்ளது. எனவே, 3 குழந்தைகளைப் பரிந்துரைத்து அவர்களில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் தத் தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு குழந்தை மட்டுமே பரிந் துரைக்கப்படும்.

தத்தெடுக்க விரும்பும் பெற் றோருக்கு எங்கள் பாதுகாப்பில் உள்ள எல்லா குழந்தைகளையும் பரிந்துரைப்போம். அதன்படி ஒவ்வொரு பெற்றோருக்கும் 3 முறை வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் வேறு வேறு குழந்தையின் புகைப்படம் மற்றும் விவரங்கள் அனுப்பப்படும். அதற்குள் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் அல்லது மறுக்கலாம்.

குழந்தை பற்றி விவரம் அனுப்பிய பிறகு 48 மணி நேரத் துக்குள் தத்தெடுப்பது குறித்த முடிவை பெற்றோர் தெரிவிக்க வேண்டும். அதன்பின் மற்ற நடை முறைகளை முடிக்க 20 நாட்கள் ஆகும். அதன்பிறகு நீதிமன்றத்தில் தத்தெடுப்பு உத்தரவு பெற முடியும். இவ்வாறு தீபக் குமார் கூறினார்.

SCROLL FOR NEXT