நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முதல்நிலை விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் (சி.வி.சி) இன்று அளிக்கப்போவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறும்போது, “எங் களின் பணியை துரிதமாக செய்துவிட்டோம். இறுதி அறிக்கையை சீலிட்ட உறை யிலிட்டு மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணையத்திடம் மார்ச் 31-ம் தேதி (இன்று) தாக்கல் செய்யவுள்ளோம். இந்த வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளை ஏற்று செயல்படவுள்ளோம்.
முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலை மையிலான அமர்வு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: 20 வழக்குகள் தொடர்பான இறுதி அறிக்கையை சி.வி.சி.யிடம் 5 நாள்களுக்குள் சி.பி.ஐ. சமர்ப்பிக்க வேண்டும். அதை பரிசீலனை செய்த பின்பு, தனது பரிந்துரையை 4 வார காலத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் சி.வி.சி. அளிக்க வேண்டும்.
எந்தெந்த வழக்குகளை கைவிடுவது, எந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து தொடர்ந்து விசாரணையை மேற்கொள்வது என்பது தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் தங்களின் பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.