இந்தியா

ஆந்திர முதல்வர் வீடு அருகே மலைப்பாம்பு பிடிபட்டதால் அதிர்ச்சி

என்.மகேஷ் குமார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு அருகே நேற்று மலைப்பாம்பு பிடிபட்டுள்ள சம்பவம், போலீஸார் மற்றும் மெய்காப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது விஜயவாடாவில் வசித்து வருகிறார். அவரது வீடு அருகே இருக்கும் பகுதிகளை மோப்ப நாய்கள் உதவியுடன் மெய்காப்பாளர்கள் சோதனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று மதியம் வீடு அருகே இருந்த பகுதிகளை சோதனை செய்தபோது, சுமார் 6.5 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு மெய்காப்பாளர்களும், போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்துச் சென்று மங்களகிரி வனப்பகுதியில் விட்டனர்.

SCROLL FOR NEXT