இந்தியா

கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

செய்திப்பிரிவு

கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.

கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 17, ஆளும் பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி- 3 , கோவா பார்வர்டு கட்சி -3 மற்றும் 3, சுயேச்சைகளின் ஆதரவுடன் கோவா வில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜக உரிமை கோரியுள்ளது.

இதை ஆளுநர் மிருதுளா சின்ஹா ஏற்று ஆட்சியமைக்க அழைப்பு விடுத் தார். அதன்படி மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு இன்று முறைப்படி பதவியேற்கிறது.

இந்நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. அதில், கோவாவில் காங்கிரஸ் அதிக இடங் களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகைக்காக உச்ச நீதி மன்றத்துக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள் ளது. எனினும் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT