இந்தியா

அசாம் கனமழை வெள்ளத்தால் 1.9 லட்சம் மக்கள் பாதிப்பு

பிடிஐ

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “கனமழை காரணமாக, லகிம்பூர், கோலாகட், மோரிகான், ஜோர்ஹட், தேமாஜி மற்றும் விஸ்வநாத் ஆகிய 6 மாவட்டங்களில் ஓடும் பிரம்ம புத்திரா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், 16,240 ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கி உள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT