இந்தியா

நேதாஜி படையில் இருந்த மூத்த வீரர் ஆம் ஆத்மியில் இணைந்தார்

செய்திப்பிரிவு

சுபாஷ் சந்திர போஸ் நடத்திய இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை வீரராக இருந்த அபாஸ் அலி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை இன்ற்உ மூத்த சுதந்திர போராட்ட வீரர் அப்பாஸ் அலி நேரில் சந்தித்து, அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார்.

94 வயது மூத்த சுதந்திர போராட்ட வீரர் அபாஸ் அலி,1942-ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவப் படையில் தலைமை வீரராக இருந்தவர்.

ஆம் ஆத்மியில் இணைந்தது குறித்து அப்பாஸ் அலி கூறுகையில், “ஊழல், வகுப்புவாதம், சாதியம் மற்றும் முதலாளித்துவம் அனைத்தும் நமது ஜனநாயகத்தை அழிக்க அச்சுறுத்தி வருகின்றன.

இருள் சூழ்ந்துள்ளது போல் அனைத்து அரசியல்வாதிகளும் அதிகார மயக்கத்தில் மிதக்கும் சமையத்தில், பொது வாழ்க்கையில் உள்ள மனிதர்களிடையே கேஜ்ரிவால் தனித்துவம் பெற்றுள்ளார்.

கேஜ்ரிவால் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. அதேசமயம் மக்களிடையே பெரும் தாக்கத்தை எழுப்பும் கேள்விகளை அவர் முன்வைத்து வருகிறார். அவர் மாற்றத்திற்கான வினையூக்கியாக திகழ்கிறார். அவரது இந்த நிலைப்பாட்டிற்காக நான் வணங்குகிறேன்.

எனது 11 வயதில் பக்த் சிங் தூக்கிலிடப்பட்ட போது பிரிட்டிஷ் ஆட்சிக் குறித்து மக்களிடையே எழுச்சிப் போராட்டத்தை மேற்கொண்ட தருணத்தைத் தொடர்ந்து, தற்போது அச்சுறுத்தும் ஆபத்தான நெருக்கடியிலிருந்து தாய் நாட்டை மீட்க நான் மேற்கொள்ளும் இறுதி போராட்டம் இது” என்றார் அவர்.

SCROLL FOR NEXT