இந்தியா

2019 தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும்: தேர்தல் ஆணையம்

பிடிஐ

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (புதன்கிழமை) தனது தரப்பு மனுவை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், வரும் செப்டம்பர் 2018-ம் ஆண்டுக்குள் வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி கருவி தயார் நிலைக்கு கொண்டு வரப்படும், அந்த கருவிகள் அனைத்து 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று உறுதியிளத்தது.

எத்தனை கருவிகள் வாங்கப்பட்டுள்ளது, எந்த நிறுவனம் உள்ளிட்ட விவரங்களையும் எழுத்துபூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுக்களை முடித்து வைத்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், தாங்கள் விரும்பிய சின்னத்துக்கு வாக்கு பதிவாகி உள்ளதா என வாக்காளர்கள் சரிபார்க்கும் காகிதப்பதிவு முறையை (விவிபிஏடி) கருவிகளை வைக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்த தகவல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

SCROLL FOR NEXT