ஹரியாணாவில் அரசுப் பள்ளி ஒன் றில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு மாணவர் கூட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
ஹரியாணா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. இதன் செயல் திறன் வீழ்ச்சிக்கு ஆசிரியர்களே காரணம் என மாணவர்கள் கூறு கின்றனர். ஆனால் ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக இருப்பதே காரணம் என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இப்பள்ளியில் ஹிந்தி, அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுபோல் 7 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு இந்தப் பிரச்சினையை அதிகாரிகளின் கவ னத்துக்கு பஞ்சாயத்து நிர்வாகம் கொண்டு சென்றுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி வந்தனா குப்தா கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக மண்டல கல்வி அதி காரியுடன் பேசியுள்ளேன். அப் பள்ளியில் ஆசிரியர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.