இந்தியா

திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு 100 மாவட்டங்களில் இல்லை: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

பிடிஐ, ஐஏஎன்எஸ்

நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தற் போது திறந்தவெளி கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள் ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை கட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திறந்தவெளி கழிப்பிட வழக்கம் ஒழியும், நோய்கள் பரவாது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தூய்மையான இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக உருவெடுத் துள்ளது. தற்போது நாடு முழு வதும் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், திறந்தவெளி கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

நாட்டில் 3 மாநிலங்கள், 101 மாவட்டங்கள், 1,67,226 கிராமங் களில் தற்போது திறந்தவெளி கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லை. மொத்தம் 3 கோடியே 48 லட்சத்து 79,320 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன” என்று கூறியுள் ளார். தூய்மையான இந்தியா இயக் கம் கடந்த 2014-ம் ஆண்டு, அக்டோ பர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது. 2019-ம் ஆண்டுகள் நாட்டில் திறந்த வெளி கழிப்பிட பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

மகளிர் தின வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தளர்வில்லா ஊக்கம், உறுதி, அர்ப்பணிப்பு கொண்ட மகளிர் சக்தியை சர்வ தேச மகளிர் தினத்தில் வணங்கு கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பொருளாதார அதி காரம் பெறுவதற்கும் சுயசார்பு மற்றும் சமூக சமத்துவம் பெறு வதற்கும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள தாக மோடி கூறியுள்ளார்.

“ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் மாநாட்டில் பங் கேற்று, தூய்மையான இந்தியா இயக்கத்தில் முக்கியப் பங்காற்றி யவர்களைக் கவுரவிக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்றும் மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT