ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் ஊரடங்கு உத்தரவு 9 மணி நேரம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.
நிலைமை கட்டுக்குள் இருப்பதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் போலீஸ் டி.ஐ.ஜி., உமாபதி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
விஜயநகரத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து, அங்கு கடந்த சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஒரிரு நாட்களாக விஜயநகரத்தில், மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.