நாட்டில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினை களுக்கான தீர்வு பட்ஜெட்டில் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி கூறினார்.
மாநிலங்களவை உறுப்பின ரான மொய்லி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினை களுக்கான தீர்வு பொது பட்ஜெட்டில் இல்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் பட்ஜெட்டில் பதில் தரப்படவில்லை. சமீபத்தில் வெளியான பொருளாதார கணக்கெடுப்பில், இந்தியாவில் பங்குகள் விற்பனை குறைந்து, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்பு அடுத்த நிதியாண்டிலும் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த ஆட்சியினர் செய்த தவறுகளும் இந்த பட்ஜெட்டில் சரிசெய்யப்படவில்லை. இவற்றை அடுத்த ஆண்டு சரிசெய்வதால் பலன் இல்லை. எனவே இந்த பட்ஜெட்டில் சரிசெய்ய கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இழப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இதை தடுத்து நிறுத்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தனியார் தொழில்துறையிலும் முதலீடுகள் குறைந்து விட்டன. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வருமான வரியில் ஒரு சிறிய நிவாரணம் அளிக்கப்பட்டது சரி. ஆனால் தேவையில்லாமல் சொத்துகளை அதிகப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டு விட்டது. அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை சீர்படுத்து வதற்கான முயற்சிகளை புதிதாக வரும் ஒவ்வொரு அரசும் செய்து வருகிறது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தும் மற்றும் கண்காணிக்கும் முறை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.