இந்தியா

ஜெயலலிதா குணமடைய சித்தராமையா விருப்பம்

இரா.வினோத்

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் கர்நாடகா- தமிழகம் இடையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து முடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தகவல் அறிந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இரு மாநிலங்களிடையே பற்றி எரியும் பகையை மறந்து, அன்பை விதைக்கும் வகையில் சித்தராமையா ‘ட்வீட்’ செய்திருப்பதாக சமூக வலைதளங்கள், அரசியல்வாதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று கூறும்போது, “ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதை அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் முழுமையாக குணமடைந்து, விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT