இந்தியா

என் நற்பெயரை சீர்குலைக்க முயற்சி: ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் சோனியா கொந்தளிப்பு

பிடிஐ

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழலில் தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்து சோனியா காந்தி, "ஹெலிகாப்டர் பேர ஊழலில் என் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ஹெலிகாப்டர் பேர ஊழலில் என்னை சிலர் திட்டமிட்டே குறிவைத்து குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை.

எனக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டுபவர்கள் அதற்கான ஆதாரங்களை தருவார்களா? அவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்கள் சொல்வது எல்லாம் பொய். மற்றவர்கள் நற்பெயரை சீர்குலைக்கும் செயலை அவர்கள் நன்றாக செய்வார்கள்.

மத்தியில் பாஜக ஆட்சி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவ்வளவு நாள் அவர்கள் என்ன செய்தார்கள். என்னிடம் ஏன் இன்னும் விசாரணையை முழுமையாக முடிக்கவில்லை" என்றார்.

இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறும்போது, "நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாஜகவினர் இவ்விவகாரம் குறித்து ஏன் முழுமையாக விசாரணை நடத்தக்கூடாது" எனக் கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT