இந்தியா

ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்பூர் தாக்குதலில் உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

கடந்த 25-ம் தேதி பாம்பூரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப்-ஐ சேர்ந்த 8 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் கைலாஷ் குமார் யாதவ், சஞ்சய் குமார், வீர் சிங், சதீஷ் சந்திரா, ராஜேஷ் குமார் ஆகிய5 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

“உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்துக்கு இயலக்கூடிய அனைத்து உதவிகளையும் செய்யும்படி முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் தியாகத்துக்கு இந்த தேசம் வீர வணக்கம் செய்கிறது” என அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT