இந்தியா

மாணவிகளை புகைப்படம் எடுத்த பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது

பிடிஐ

பள்ளி மாணவிகளிடம் அநாக ரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததையடுத்து, பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி நேற்று கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பாலக்காடு அருகே உள்ள ஒட்டப்பாலம் பகுதியில் திரைப்பட சூட்டிங் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பள்ளி மாணவி களை ரவி தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அத்துடன் அவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண் டுள்ளார். இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் மாணவிகள் புகார் செய்தனர். இதையடுத்து, பள்ளி முதல்வர் கொடுத்த புகாரின் பேரின் ரவியை கைது செய்துள்ளோம். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டை ரவி மறுத் துள்ளார்.

SCROLL FOR NEXT