இந்தியா

தேசியவாத காங்கிரஸில் சிவசேனை செய்தித் தொடர்பாளர்

செய்திப்பிரிவு

சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகுல் நார்வேகர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

வரும் மக்களவைத் தேர்தலின் போது தேசியவாத காங்கிரஸ் சார்பில் மாவல் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியபோது, எனது கட்சியே எனக்கு எதிராகச் செயல்படுவது எனக்கு தெரியவந்தது, அதனால் சிவசேனையில் இருந்து விலகியுள்ளேன். எனது ஆட்சேபத்தை தலைமையிடம் தெரிவித்துவிட்டேன் என்றார்.

அப்போது உடன் இருந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறியபோது, நார் வேகரின் சமூகப் பணி, கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.-பி.டி.ஐ.

SCROLL FOR NEXT