நிலக்கரிச் சுரங்கங்களில் பெரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது, முறைகேட்டில் தொடர்புடைய நிறுவனங்களை எந்தச் சட்டமும் காப்பாற்றாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
நாடு முழுவதும் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.80 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி சுட்டிக் காட்டினார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத் தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.எல்.லோதியா தலைமை யிலான 3 நபர் அமர்வு முன்னிலை யில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன் வதி, நிலக்கரி சுரங்கங்கள் ஒவ் வொன்றிலும் சுமார் 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப் பட்டுள்ளது எனவே அந்த ஒதுக்கீடு களை ரத்து செய்வது கடினம் என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்டு நீதிபதி கள் கூறியதாவது:
நிலக்கரி நிறுவனங்கள் முறை கேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த நிறுவனங் கள் அதன் விளைவுகளை சந்தித்துத் தான் ஆக வேண்டும். இவ்வளவு பெரும் தொகை முதலீடு செய்யப் பட்டுள்ளது என்ற வாதத்தை ஏற்க முடியாது. முதலீட்டை கூறி சாக்குப்போக்கு கூறக்கூடாது.
எந்த நிறுவனமாக இருந்தாலும் முறைகேடு புகார் உறுதி செய்யப் பட்டால் சுரங்கங்களில் செய்யப் பட்டுள்ள முதலீடு அனைத்தும் சட்டவிரோதமாகிவிடும். இந்த வகையில் முறைகேட்டில் தொடர் புடைய நிறுவனங்களை எந்தச் சட்டமும் காப்பாற்றாது என்று தெரிவித்தனர்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சுரங்க ஒதுக்கீடுகள் முழுவதும் மத்திய அரசையே சார்ந்தது. மாநில அரசு உறுதுணை யாக மட்டுமே செயல்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திர அரசும் இதுபோன்ற நிலைப் பாட்டை ஏற்கெனவே தெளிவு படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் சுரங்க ஒதுக்கீட்டில் தங்களுக்கு தொடர்பில்லை, மத்திய அரசே முழு பொறுப்பு என்று உச்ச நீதிமன்றத்தில் முன்னரே தெரி வித்துள்ளன.