இந்தியா

நெல்லூர் அருகே ரூ. 1 கோடி பறிமுதல்

என்.மகேஷ் குமார்

எந்தவித ஆவணங்களும் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.1 கோடியை நெல்லூர் அருகே போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இம்மாதம் 30ம் தேதி முதல் வரும் மே மாதம் 7ம் தேதி வரை நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் வரிசையாக நடைபெற உள்ளன. தற்போது நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களுக்கு வேட்பு மனு தாக்கல்கள் தெலங்கானா பிரதேஷ் மற்றும் ஆந்திர பிரதேச (சீமாந்திரா) பகுதிகளில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் ரூ. 5 கோடிவரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், துப்பாக்கி, வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை காலை நெல்லூர் மாவட்டம் கோவூறு மண்டலம் இன்னமடுகு என்கிற இடத்தில் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் காரில் நெல்லூருக்கு கொண்டு செல்ல முயன்ற ரூ. 1கோடி ரொக்க பணத்தை காருடன் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT