இந்தியா

3 வருட வறட்சிக்குப் பிறகு ஆந்திர விவசாயிகளிடம் நம்பிக்கையை விதைத்த மழை

செய்திப்பிரிவு

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் பெய்துள்ள தென் மேற்குப் பருவ மழை, 3 வருட வறட்சிக்குப் பிறகு விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

ஜூன் முதல் வாரத்தில், இரு நாட்களில் 50% சராசரி மழை பொழிந்துள்ள நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவைத் தொடங்கினர். முன்னதாக வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மானிய விதைகள்

இந்த ஆண்டு சராசரி மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானியல் துறை உறுதி அளித்ததை அடுத்து, சுற்றுச்சூழல் அமைச்சர் சித்த ராகவ ராவ், விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளையும், மானிய விதைகளையும் வழங்கினார். அவை மழைக்காலப் பயிர் சாகுபடிக்கான விதைகளாகும்.

உகந்த பருவ நிலை

இதுகுறித்துப் பேசிய வேளாண்துறை உதவி இயக்குநர் ஜி.ராம், ''4,500 ஹெக்டேர்களில் பச்சைப் பயறு, 5,500 ஹெக்டேர்களில் உளுந்து, 6,800 ஹெக்டேர்களில் கடுகு மற்றும் பல பயிர்களையும் விதைக்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT