இந்தியா

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்: கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச அளவில் விற்பனை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயுத விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித் திருப்பதாகவும், ஆயுத இறக்கு மதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2012 முதல் 2016 வரையிலான காலத்தில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. அதாவது சர்வதேச அளவிலான ஒட்டு மொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு மட்டும் 13 சதவீதமாக இருந்தது. இது 2007 முதல் 2011 வரையிலான காலத்தில் 9.7 சதவீதமாக இருந்தது. அப்போதும் இந்தியா தான் இறக்குமதியில் முதலிடத்தில் இருந்தது.

அணு ஆயுதங்களை வைத் திருக்கும் பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகளின் ராணுவ வலிமை அதிகரித்து வருவது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் உள்கட் டமைப்பு வசதிகளை அதிகரிக்க சீனா கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகிறது.

இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளுடன் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பான உறவை வலுப்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி தலைமை யிலான அரசு, உள்நாட்டு ஆயுத உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த போதிலும், அதிகரித்து வரும் ஆயுத தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிட மிருந்து ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா வுக்கு அடுத்தபடியாக, சவுதி அரேபியா (8.2%), ஐக்கிய அரபு அமீரகம், சீனா மற்றும் அல்ஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

ஒருபுறம் இந்தியாவின் ஆயுத இறக்குமதி அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இறக்குமதி குறைந்து வருகிறது. சர்வதேச ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கு கடந்த 5 ஆண்டுகளில் 4.5 சதவீதமாக இருந்தது. இது முந்தைய 5 ஆண்டுகளில் 5.5 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகளின் ராணுவ வலிமை அதிகரித்து வருவது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

SCROLL FOR NEXT