இந்தியா

தேவயானி வழக்கை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும்: குர்ஷித்

செய்திப்பிரிவு

இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

விசா மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட தேவயானி கோப்ரகடே, ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரக அலுவலகப் பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு தூதரக ரீதியிலான சட்டப்பாதுகாப்பு வழங்கப் பட்டது. அவர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தியா திரும்பினார் தேவயானி.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அத்துறையின் செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் தேவயானி கூறிய தாவது:

“நான் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். எனது சார்பில் இந்திய அரசும், எனது வழக்கறிஞரும் பேசுவார்கள்” என்றார்.

இதற்கிடையே செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:

“தேவயானி தவறேதும் செய்யவில்லை. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சலுகைகளை ரத்து செய்தது, பழிவாங்கும் நடவடிக்கையல்ல. பதில் நடவடிக்கைதான். அனைத்து நாடுகளின் தூதரக அதிகாரி களுக்கும் ஒரே மாதிரியான சலுகைகளைத்தான் தர வேண்டும். நெருங்கிய நண் பர்கள் என்ற அடிப்படை யில் கூடுதல் சலுகைகள் அளிக்கப்பட்டது. ஆனால், அவையும் மாறுதலுக்கு உட்பட்டதுதான்” என்றார்.

அமெரிக்க அதிகாரி

தேவயானியை நாட்டை விட்டு வெளியேறு மாறு அமெரிக்கா அறிவுறுத்தி யதற்கு பதிலடியாக, டெல்லி யில் பணிபுரிந்த அந்நாட்டு தூதரக அதிகாரி வெய்ன் மேயை அமெரிக்கா திரும்பு மாறு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா அறி வுறுத்தியது. 48 மணி நேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா புறப்பட அவர் ஆயத்தமாகி வருவதாக அந் நாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.- பி.டி.ஐ.

SCROLL FOR NEXT