பிடிஐ செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் பல இன மக்களுக்குள் கலவரத்தைத் தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பயங்கரவாத அமைப்பினர் சிலர் துணையுடன் திரிபுரா மாநிலத்தில் கலவரத்தைத் தூண்டிவிட பாஜக நினைக்கிறது.
இடதுசாரி ஆளும் மாநிலங் களில் அமைதியை சீர்குலைக்க மிகப்பெரிய திட்டத்துடன் செயல் படுகின்றனர். திரிபுராவில் பல ஆண்டுகளாக இல்லாத வகையில், இப்போது பழங்குடி யினத்தவர்களுக்கும் பழங் குடியினத்தவர் அல்லாதவர்களுக் கும் பிரச்சினை மூண்டுள்ளது. மற்ற வடகிழக்கு மாநிலங்களில் நடந்தது போலவே திரிபுராவிலும் அமைதியை கெடுக்க முயற்சி நடக்கிறது. இவ்வாறு யெச்சூரி கூறினார்.