கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பின்போது துங்கபத்ரா நதியில் திடீரென வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியதில் 13 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனை வரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து 3-ம் நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் விசர்ஜன நிகழ்ச்சி நடைபெற்றது. ஷிவமோகா மாவட்டத்தில் துங்கபத்ரா நதியில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை கொண்டு வரப்பட்டு கிரேன் உதவி யுடன் கரைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போது விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்த பக்தர்களும் விசர்ஜன நிகழ்ச்சியை காண முண்டியடித்தனர். அப்போது படகு மூலம் நதியின் மையப் பகுதிக்கு விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கரைக்க முயற் சிக்கப்பட்டது. அப்போது திடீரென நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 13 பக்தர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனை வரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட் டுள்ளன. தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.
சம்பவம் குறித்து நேரில் பார்த்த பக்தர்கள் கூறும்போது, ‘‘விநாயகர் விசர்ஜன நிகழ்ச்சியை காண சுமார் 10 ஆயிரம் பேர் துங்கபத்ரா நதிக் கரையில் திரண்டு வந்தனர். அப் போது திடீரென நதியில் வெள்ளம் வேகமாக பெருக்கெடுத்ததால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது’’ என்றனர்.
இதையடுத்து விநாயகர் சிலை களை துங்கபத்ரா நதியில் கரைப் பதற்கு போலீஸார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். மேலும் நதியின் இரு கரைகளிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.