இந்தியா

எனக்கு அனுபவம் இல்லை என்று கூறுவதா? - பிரதமர் மோடி மீது அகிலேஷ் தாக்கு

பிடிஐ

தனக்கு முன் அனுபவம் இல்லை என்று கூறிய பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. பிரச்சாரத் தின் போது பேசிய பிரதமர் மோடி, “அகிலேஷுக்கு அனுபவம் இல்லை. காங்கிர ஸாரின் தந்திரத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை. மேலும் 1984-ல் தந்தை முலாயம் சிங் யாதவை கொலை செய்ய முயன்றவர்களுடன் (காங்கிரஸ்) அகிலேஷ் யாதவ் எப்படி கூட்டணி வைத்தார்” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் மெயின்புரி யில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, மோடியின் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் அகிலேஷ் பேசிய தாவது:

பிரதமர் மோடியின் ஆலோசகர் கள் இதைவிட சிறப்பான, சமீபத்திய பல்வேறு உதார ணங்களை அவருக்கு கூறியிருக்க லாம். அதாவது, என் மீதும், காங்கிரஸ் மீதும் மக்கள் மத்தியில் கோபத்தை உரு வாக்குவதற்காக 1984 சம்ப வத்தை மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.

அதைவிடுத்து, பிரோசாபாத் தில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் மாநில தலைவர் ராஜ் பப்பர் எங்களைத் தோற்கடித்ததை குறிப்பிட்டிருக் கலாமே. தோல்வி பயம் காரணமாகவே அவர் இதுபோன்ற பழைய சம்பவங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

மேலும் எனக்கு அனுபவம் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், சைக்கிளில் (சமாஜ்வாதியின் சின்னம்) செல் பவர்கள் ஒருமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து ஓட முடியும். எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும். அதுவும் வேகமாக ஓட்ட தெரியும். அதேநேரம், யானை (மாயாவதி கட்சி சின்னம்), தாமரை(பாஜக சின்னம்) ஆகியவற்றால் சைக்கிளுடன் போட்டி போட முடியாது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT