இந்தியா

பத்ரிநாத் தலைமை பூசாரி தற்காலிக பணி நீக்கம்- பாலியல் புகார் எதிரொலி

கவிதா உபாத்யாய்

டெல்லி ஓட்டல் ஒன்றில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டதை யடுத்து, பத்ரிநாத் கோயில் தலைமை பூசாரி பதவியிலிருந்து கேசவ நம்பூதிரி செவ்வாய்க்கிழமை தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டார்.

இதுகுறித்து பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு தலைவர் கணேஷ் கோடி யல் கூறியதாவது:

கேரளத்தைச் சேர்ந்த கேசவ நம்பூதிரி கடந்த 2009-ம் ஆண்டு பத்ரிநாத் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார். பாலியல் புகார் எழுந்ததையடுத்து நம்பூதிரி தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாக நீக்கப் படுவார்.

இந்த விவகாரத்தில் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தால் நம்பூதிரி மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்படுவார். அதுவரை இப்போது துணை பூசாரியாக உள்ள வி.சி. ஈஷ்வர பிரசாத் நம்பூதிரிக்கு தலைமை பூசாரி பொறுப்பு வழங்கப்படும் என்றார்.

இதற்கிடையே, இதுகுறித்து விசாரிப்பதற்காக கோயில் நிர்வாகக் குழு 5 நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT