இந்தியா

லாலு ஜாமீன் மனு: சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு தொடர்பாக விளக்கமளிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லாலு புரசத் யாதவ்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பிகார் உயர் நீதிமன்றமும் அனுமதி மறுத்த நிலையில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அவரது ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய பெஞ்ச், லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT