இந்தியா

உ.பி., அமைச்சரவை விரிவாக்கம்: ராஜா பையாவுக்கு மீண்டும் இடம்

செய்திப்பிரிவு

உ.பி., அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் முதல்வர் அகிலேஷ் யாதவ். கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரகுராஜ் பிரதாப்சிங் ராஜா பையாவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், போலீஸ் டி.எஸ்.பி. ஜியா உல் ஹக், படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதியில் தொடர்பு இருப்பதாக, குண்டா தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ராஜா பையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவர் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் வந்தார். தொடர்ந்து அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

சி.பி.ஐ. விசாரணைக்குப் பின்னர், ராஜா பையா போலீஸ் டி.எஸ்.பி. ஜியா உல் ஹக், கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவருக்கு உ.பி., அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT