இந்தியா

மைசூரு நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு: வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பீதி

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நேற்று சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

மைசூரு லட்சுமிபுரத்தில் உள்ள மாநகர நீதிமன்ற கட்டிட‌த்தின் கழிவறை அமைந்திருக்கும் பகுதியில் நேற்று மாலை இந்த குண்டு வெடித்தது. இதனால் கழிவறைகளின் மேற்கூரை, கதவுகள், ஜன்னல்கள் ஆகியவை உடைந்து சேதமடைந்தன. மேலும் அப்பகுதியில் இருந்த 4 பேருக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டது.

குண்டுவெடிப்பு சத்தத்தை கேட்டதும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதை யடுத்து மாநகர நீதிமன்ற பதிவாளர் அனைத்து நீதிமன்ற அலுவல்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகர போலீஸார் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், ‘‘சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் பெரிதாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. கட்டிட இடிபாடு கள் சிறிய அளவிலே ஏற்பட்டுள் ளது. போலீஸார் தீவிரமாக விசா ரித்து வருகின்றனர்’’ என்றார்.

இதனிடையே, குண்டு வெடிப் புக்கு முன்னர், கழிவறை பகுதி யில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் மர்ம நபர் ஒருவர் ஓடிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT