‘விவசாயிகளை மரணப்பிடியி லிருந்து விடுவித்தல்’ என்ற தலைப் பிலான பயிற்சிப் பட்டறை டெல்லி யில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
முடுக்கப்பட்ட நீர்ப்பாசன பயன் திட்டம் (ஏஐபிபி) உட்பட ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பிலான பாசனத் திட்டங்கள் மூலம் 2 கோடி ஹெக்டர் சாகுபடி பரப்புக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கப்படும். இதன்மூலம் வேளாண் மகசூல் இரு மடங்காக அதிகரிக்கப்படும்.
ஏஐபிபி தவிர, 89 திட்டங்களுக்கு பிரதம மந்திரி சிஞ்சாய் யோஜனா மூலம் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் 28 திட்டங்கள் ஏஐபிபி-யின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
விவசாயிகள் தற்கொலை வருந்தத்தக்கது. இது மாநில விவ காரம் என்றபோதும், இப்பிரச் சினையை மத்திய அரசு கவனத்தில் கொண்டு வந்துள்ளது. பாசனத் திட்டங்கள் மூலம் சாகுபடி பரப்பை அதிகமாக்குவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.
விவசாயக் கடன் ஒரு பிரச்சினை யாக உள்ளது. ரூ. 9 லட்சம் கோடி வேளாண் துறைக்கு முன்னுரி மைக் கடன் வழங்க அனுமதிக்கப்பட் டுள்ளது. பயிர்காப்பீட்டுத் திட்டங் களும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கின்றன.
மழை மட்டுமே தீர்வாக அமை யாத சூழலில், சொட்டு நீர் பாசனம் தற்போதைய தேவையாக உள்ளது. நீர்ப்பாசன வசதி பெற்ற நிலங் களில் அதிகபட்சமாக பஞ்சாபில் 96 சதவீதம் உள்ளது. ஜார்க்கண்டில் 5.6 சதவீத சாகுபடி பரப்பே நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளது.
அதிகாரிகள் எதிர்ப்பு
துரதிருஷ்டவசமாக, அதிகாரி கள் விவசாய மானியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முந்தைய காங்கிரஸ் அரசின் வேளாண்துறைக்கு குறைவான பட்ஜெட் ஒதுக்கியதே இதற்குக் காரணம்.
ரூ.70 ஆயிரம் கோடிக்கு விமா னங்கள் வாங்கியதற்குப் பதிலாக கிராமங்களுக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்து விவசாயிகள் தற் கொலையை முந்தைய அரசு தடுத்திருக்கலாம்.
தெலங்கானா போன்ற சிறிய மாநிலங்கள் பாசனத் திட்டங்களுக் காக ரூ. 27 ஆயிரம் கோடி ஒதுக் கீடு செய்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ரூ. 8,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்காக பணப்பயிர் சாகுபடியை அதிகரிக்க வேண்டும். ராஜஸ்தானில் பரீட் சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆலிவ் சாகுபடி வெற்றிகரமான பலனை அளித்துள்ளது. இதனை விரிவுபடுத்த வேண்டும்.
கோதுமை, நெல் போன்ற வழக்கமான பயிர்களுக்குப் பதில் பருப்பு மற்றும் தானிய வகைகளை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளின் நிலை உயரும். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.1.3 லட்சம் கோடி சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்து, சேமிப்பு உயரும். இவ்வாறு அவர் பேசினார்.