இந்தியா

திருப்பதி என்கவுன்ட்டர் வழக்கு: விசாரணை குழு அறிக்கையின் நகலை வழங்கக் கோரி மனு

செய்திப்பிரிவு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக தமிழ கத்தைச் சேர்ந்த 20 பேரை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன் றனர். இது போலி என்கவுன்ட்டர் என குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, விசாரணையை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. போலி என்கவுன்ட்டர் என்பதற்கான சாட்சிகள் இல்லாத காரணத்தி னால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்கவுன்ட்டரில் உயிரிழந்த சசி குமாரின் மனைவி முனியம்மாள் கடந்த 10-ம் தேதி திருப்பதி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதில், சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையின் நகலை இலவசமாக தங்களுக்கு அளிக்க உத்தரவிடுமாறும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை பரிசீலித்த திருப்பதி 4-வது கூடுதல் முதல் நிலை நீதிபதி சன்னாசி நாயுடு, விசாரணையை வரும் ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முனியம்மாள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

பஸ்ஸில் சென்ற எனது கணவர் உட்பட 20 பேரை மிரட்டி அழைத்துச் சென்ற ஆந்திர போலீஸார், அவர்களை கொடூர மான முறையில் சுட்டுக் கொன்றுள் ளனர். ஆனால் இதுகுறித்து விசாரணை நடத்திய ஆந்திர சிறப்பு புலனாய்வுக் குழு, சாட்சிகள் இல்லை எனக் கூறி இந்த வழக்கை முடிக்கப் பார்க்கிறது.

எனக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டேன். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் போலீஸார் மீது நம்பிக்கை இல்லை. எனக்கு உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு முனியம்மாள் கூறினார்.

SCROLL FOR NEXT