இந்தியா

அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி

செய்திப்பிரிவு

அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமா கத் தாக்கும் அக்னி-4 ஏவுகணை திங்கள்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் வீலர் தீவு களில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 அனைத்துப் பரிசோ தனை நிலைகளையும் வெற்றிக ரமாகக் கடந்தது. தன் முழு திறன் தொலைவையும் ஏவுகணை கடந்தது என ஒருங்கமைந்த சோதனைக் கள இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் தெரிவித் தார். இந்த ஏவுகணை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இந்த ஏவுகணை இருமுறை வெற்றிகர மாக ஏவப்பட்டது. தற்போது 3 ஆவது முறையாக பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.

இலகு ரக ஏவுகணையான அக்னி-4 இந்தியாவின் நீண்ட தூர ஏவுகணைகளில் இரண்டா மிடத்தில் உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி-5 5,500 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் திறன் கொண் டது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-4 ஏவுகணைப் பரிசோ தனை வெற்றி பெற்றதற்காக விஞ்ஞானிகளை டிஆர்டிஓ தலைவர் அவிநாஷ் சந்தர் பாராட்டினார். அவர் கூறுகை யில், “அக்னி-4ன் மேம் பாட்டுப் பணிகள் நிறைவடைந்து விட்டன. ராணுவத்தில் இணைக்கத் தயாராக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT