இந்தியா

நரேந்திர மோடி மீது சிவசேனா குற்றச்சாட்டு: பிரதமர் பணியை விட்டுவிட்டு பிரச்சாரம் செய்கிறார்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், 25 ஆண்டு கால பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து, பாஜக மீது சிவசேனா தொடர்ந்து விமர்சனக் கணைகளைத் தொடுத்து வருகிறது.

பிரதமருக்கான பணிகளைத் தவிர்த்து விட்டு, மோடி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவர் பிரதமரான பிறகு மகாராஷ்டிர மாநிலத்துக்கு என்ன செய்தார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான, சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: டெல்லியில் தனக்கு இருக்கும் பணிகளை விட்டு விட்டு, மகாராஷ்டிரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசி வருகிறார்.

மோடி பாஜகவில் பெரும் தலைவராக இருக்கலாம். ஆனால், மகாராஷ்டிரத்தில் பிரபலமான பாஜக தலைவர்கள் இல்லாததால் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டிய நிர்பந்தம் உள்ளது.

பாஜக சொல்வது போல மோடி நட்சத்திரப் பிரச்சாரகராக இருந்தால், பாஜகவுக்கு டெல்லியிலிருந்தே வாக்குக் கேட்கலாமே. மக்கள் நிச்சயம் அவருக்கு செவிசாய்ப்பார்கள். அதை விடுத்து, 25-30 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பது ஏன்?

அமர்நாத் யாத்திரைக்கு சில விஷமிகள் இடையூறு விளைவித்த போது, மும்பையில் அமர்ந்தபடியே பால்தாக்கரே எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு விஷமிகளுக்கு யாத்ரீகர்களைத் தொல்லைப்படுத்தும் தைரியம் வரவில்லை.

கிராமம் கிராமமாகச் சென்று பிரதமர் வாக்குச் சேகரிப்பது அந்தப் பதவிக்குப் பொருத்தமான செயல் அல்ல. பிரதமர் பதவிக்கான கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

பிரதமரான பிறகு, மகாராஷ்டிர மாநிலத்துக்கு அவர் என்ன செய்தார். சத்ரபதி சிவாஜி மீது திடீரென பிரியம் காட்டுகிறார்.

பிரதமர், பிரச்சாரக்கூட்டங் களில் பங்கேற்கும் போதெல் லாம், பாதுகாப்பு உட்பட ஏராள மான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பணம் செலவிடப்படுகிறது. இது அரசு கஜானாவிலிருந்தே செலவிடப் படுகிறது. முன்பு, சோனியாகாந்தியும் மன்மோகன் சிங்கும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்திய போது, அவர்களை பாஜக கடுமையாக விமர்சித்தது.

இவ்வாறு, சாம்னா தலையங் கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT