இந்தியா

பொது இடத்தில் செல்போன் பயன்படுத்தும் பெண்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்: உத்தரப் பிரதேச கிராம பஞ்சாயத்து உத்தரவு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது இடங்களில் பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டத்துக்குட்பட்ட மடோரா கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம பஞ்சாயத்து கூட்டத்தில், வீட்டுக்கு வெளியே அதாவது பொது இடங்களில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதை மீறுவோருக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் போன்ற குற்றச் செயல்களை தடுப்பதற்காகவே இந்த அபராதம் விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிப்பது உட்பட பல்வேறு நவீன பழக்க வழக்கங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT