இந்தியா

எல்லையில் பாக். அத்துமீறி தாக்குதல்

பிடிஐ

24 மணி நேரத்துக்குள் இரண்டா வது முறையாக நேற்று எல்லை யில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நேற்று காலை 6.40 மணிக்கு பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். தொடர்ந்து விட்டுவிட்டு தாக்குதல் நடத்தினர்.

82 மி.மீ. பீரங்கி குண்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதில் இந்தியத் தரப்பில் பாதிப்பு ஏதுமில்லை. என்றாலும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந் நிலையில் 24 மணி நேரத்துக்குள் நேற்று 2-வது முறையாக பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி பாகிஸ்தான் தாக்குதலில் தீபக் ஜகன்னாத் காட்கே என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் அத்துமீறலுக்கு, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நேற்று கண்டனம் தெரிவித்தார்.

அமைச்சர் கண்டனம்

இதுகுறித்து அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறும்போது, “பண்டிகை காலத் தில் எல்லையில் ஆத்திர மூட்டும் வகையில் தாக்குதல் நடத்துவது பாகிஸ்தான் வழக்கமாக இருந்து வருகிறது. தீய சக்திகளை முடி வுக்கு கொண்டுவர எல்லையை காக்கும் நமது வீரர்கள் உறுதி யேற்றுள்ளனர். ஹோலி பண்டிகை நாளில் இதே உறுதியை நாமும் ஏற்போம்” என்றார்.

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் திறன் இந்திய அரசிடமும் அதன் அமைப்புகளிடமும் உள்ளது. பாகிஸ்தான் அத்துமீறலுக்கு மோடி அரசு தகுந்த பதிலடி கொடுக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT