பாலியல் துணை சேவை என்ற பெயரில் நடத்தப்படும் 240 ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படும் நிபுணர் குழுவின் பரிந்து ரையின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் துணை சேவை (எஸ்கார்ட்) என்ற பெயரில் ஆபாச இணையதளங்கள் நடத் தப்படுகின்றன. இவ்வாறான 240 ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கான உத்தரவு, தொலைத்தொடர்பு நிறுவனங்க ளுக்கு கடந்த திங்கள்கிழமை அளிக்கப்பட்டுள்ளது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் புகாரைத் தொடர்ந்து அமைக்கப் பட்ட நிபுணர் குழு இதுதொடர் பாக பரிந்துரை செய்துள்ளது.
எனினும் இம்முடிவுக்கு இணையதள இணைப்பு வழங்கும் தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“இணைய பக்கங்களின் உள்ளீடுகளை தடை செய்ய முடியாது. தொழில்நுட்ப நடை முறை சாத்தியம் புரியாமல் இந்த உத்தரவு பிறப்பிக் கப்பட் டுள்ளது. முடக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட இணையதளங் கள் தங்களின் பெயரையோ, இணைப்பையோ சிறிய அளவில் மாற்றம் செய்தால் மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும்” என இணையதள சேவை வழங்கும் (ஐஎஸ்பி) நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தொலைபேசி எண்கள், இணையதளங்களைக் கண்கா ணித்து குற்றவாளிகளை தண்டிப் பதன் மூலம், முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும். பத்திரிகை களில் வெளிவரும் பாலியல் துணை விளம்பரங்களைத் தடுக் கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய தடை என்பது பிரச்சினைக்கான அரைகுறை யான தீர்வு. எனக்குத் தெரிந்த வரையில் இந்திய இணையதளங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் துணை சேவை களை அளிப்பது தொடர்பான பெரும்பாலான ஆபாச இணையதளங்கள் மும்பையைச் சார்ந்து இயங்குபவை எனத் தெரியவந்துள்ளது.