இந்தியா

வினோத் கன்னாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ராம் தேவ்: குருதாஸ்பூர் தொகுதி - பாஜக இன்று முடிவு

ஆர்.ஷபிமுன்னா

இந்தி நடிகர் வினோத் கன்னா, பஞ்சாபின் குருதாஸ்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தொழிலதிபர் ஸ்வரன் சாலாரிக்கு வாய்ப்பளிக்குமாறு பாஜகவிடம் யோகி ராம்தேவ் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

பாஜக சார்பில் 1998 முதல் 2009 வரை குருதாஸ்பூர் எம்.பி.யாக வினோத் கன்னா இருந்தார். இவர் கடந்த தேர்தலில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப்சிங் பஜ்வாவிடம் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பாஜக வெளி யிட்ட வேட்பாளர் பட்டியலில் வினோத்கன்னாவின் பெயர் பெரி

தும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கன்னாவுக்கு பதிலாக தனக்கு நெருக்கமான தொழில திபர் ஸ்வரன் சாலாரியை நிறுத்த வேண்டும் என பாஜக தலைமையிடம் யோகி ராம் தேவ் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ராம்தேவ், பாஜக ஆதரவாளராக மாறி 5 ஆண்டுகளே ஆனாலும் அவருக்கும் கட்சியில் செல்வாக்கு உருவாகிவிட்டது. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் நித்தின் கட்கரி மற்றும் பஞ்சாபின் பாஜக தலைவர்கள் ராம்தேவுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் வினோத்கன்னா தனது தொகுதியை மீண்டும் பெறுவதற்காக தனது தொழிலதிபர் மனைவி கவிதா கன்னாவுடன் கடந்த 3 நாள்களாக டெல்லியில் முகாமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார். எல்.கே.அத்வானி உள்பட பாஜக மூத்த தலைவர்கள் பலர் இவருக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட குருதாஸ்பூரின் வேட்பாளர் பெயர் புதன்கிழமை அறிவிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT