இந்தியா

புதிய உத்தரவு மாட்டு இறைச்சியை தடை செய்யவில்லை: கேரள உயர் நீதிமன்றம் விளக்கம்

செய்திப்பிரிவு

நாடு முழுதும் இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை வாங்கவும் விற்கவும் தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இறைச்சியையே தடை செய்யவில்லை, இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதை ஒட்டுமொத்தமாக தடை செய்யவில்லை, மாறாக இறைச்சிக்காக சந்தைகளில் கொண்டு விற்பனை செய்வதற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது, இது விலங்குகள் சந்தையில் இத்தகைய விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காகவேயன்றி இறைச்சியை முற்றும் முழுதாக தடை செய்யவில்லை.

மேலும் விலங்குகள் சந்தைக்கு வெளியே மாடுகளையோ, ஒட்டகங்களையோ விற்பதைத் தடை செய்யவில்லை. விதிமுறைகளை படித்தால் பதற்றத்துக்கு தேவையே இல்லை என்பது தெரியவரும்.

கேரள உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியதையடுத்து மனுதாரரின் வழக்கறிஞர் மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.

இளையோர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் டி.ஜி.சுனில் இந்த பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT