திருவனந்தபுரத்தில் சர்வதேச யோகா தினத்துக்கான நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கலந்து கொண் டார். அப்போது யோகாவுடன் சமஸ் கிருத பிரார்த்தனை பாடலும் இடம் பெற்றது. பின்னர் உரையாற்றிய சைலஜா, ‘‘யோகா ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்தமில்லை. எனவே பிரார்த்தனை பாடல்கள் அவசியமற்றது’’ என்றார். அத்துடன் சமஸ்கிருத பாடல்களை சேர்த்தது ஏன் என்றும் ஆயுஷ் துறை அதி காரிகளிடம் கேள்வி எழுப்பினார். அனைத்து மதத்தினரும் ஏற்கும் வகையிலான பிரார்த்தனை பாடல் களை வேண்டுமென்றால் நிகழ்ச்சி யில் சேர்க்கலாம் என்றும் அவர் களுக்கு அறிவுரை வழங்கினார்.
மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி சமஸ்கிருத பிரார்த்தனை பாடல் சேர்க்கப்பட்ட தாகவும், அந்த பாடல் பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர்.