இந்தியா

இமாச்சலில் 1 கோடி மரக்கன்று நட இலக்கு

ஐஏஎன்எஸ்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 25 சதவீத நிலப்பரப்பு வனப் பகுதியால் சூழப்பட்டிருந் தாலும், அங்கு நடப்பு மழைக் காலத்தில் 1 கோடி மரக் கன்றுகளை நட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பிலாஸ்பூர் மாவட்டம் நெராஸ் கிராமத்தில், 67-வது மாநில அளவிலான மரக் கன்று நடும் திட்டத்தை முதல்வர் வீரபத்ர சிங் தொடங்கி வைத்தார். இதன்படி, 15 ஆயிரம் ஹெக்டே ரில் அர்ஜுன், ஹரத் மற்றும் ஆம்லா உள்ளிட்ட உள்நாட்டு மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தை விரைவுபடுத் தும் வகையில், சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு வரும் 12-ம் தேதி அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 3,000 இளைஞர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

          
SCROLL FOR NEXT