இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவை சேர்ந்த திரு நங்கை அக்கை பத்மஷாலி கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்த திருநங்கை அக்கை பத்மஷாலி நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறந்தவர். 10-ம் வகுப்பு படிக்கும் போது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் திருநங்கையாக மாறினார். குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட தால், நிராதராவாக தெருவில் விடப்பட்டார். பள்ளிப்படிப்பை தொடரமுடியாமல் பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்டார்.
பாலியல் தொழிலாளர்களுக் காக போராடிவரும் ''சங்கமா'' தன்னார்வ தொண்டு நிறுவனத் தினர் அக்கை பத்மஷாலியை மீட்டனர். அங்கு விழிப்புணர்வு பெற்ற அக்கை பத்மஷாலி சில ஆண்டுகள் சங்கமாவுடன் இணைந்து பாலியல் தொழிலா ளர் நலனுக்காவும், பாலியல் சிறுபான்மையினர் நலனுக்காக வும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
பின்னர் திருநங்கையர் நலனுக்கு தனியாக ''ஒந்ததே'' என்ற அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் நாடு தழுவிய அளவில் திருநங்கைகள் உரிமைக்காகவும், நலனுக்காவும் போராட்டங்களை நடத்தி வருகிறார். குழந்தைகள் நலன், பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறார்.
கவுரவம் தந்த பட்டம்
இந்நிலையில் அமைதி மற்றும் கல்விக்கான இந்திய மெய்நிகர் பல்கலைக்கழகம் கடந்த 31-ம் தேதி திருநங்கை அக்கை பத்மஷாலிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. திருநங்கை கள் நலனுக்காகவும், உரிமை களுக்காகவும், பாதுகாப்புக்காக வும் தொடர்ந்து போராடிவருவ தால் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டது. இதன் மூலம் நாட்டிலேயே முதன் முதலாக கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை என்ற பெருமையை அக்கை பத்மஷாலி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அக்கை பத்மஷாலி, 'தி இந்து'விடம் கூறிய தாவது: ''இந்த மிகப்பெரும் அங்கீ காரத்தை நான் எதிர்பார்க்க வில்லை. எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய அமைதி மற்றும் கல்விக்கான இந்திய மெய்நிகர் பல்கலைக் கழகத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன். சமூகத்தில் புறக்கணிக் கப்பட்டுவரும் திருநங்கைகளுக்கு இந்த அங்கீகாரம், புதிய நம்பிக் கையை தரும் என நம்பு கிறேன். திருநங்கைகளை சக மனிதராக நேசித்து, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்''என்றார்.
குவியும் வாழ்த்துகள்
கவுரவ டாக்டர் பட்டம் பெற் றுள்ள அக்கை பத்மஷாலிக்கு சமூக செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளை யும் தெரிவித்துள்ளனர். ஏராள மானோர் சமூக வலைத்தளங் களில் வாழ்த்துகளை கூறிவரு கின்றனர்.
அக்கை பத்மஷாலி கடந்த ஆண்டு நாட்டிலேயே முதல் முறை யாக ஓட்டுநர் உரிமை பெற்ற திருநங்கை என்ற பெருமையை பெற்றார். இதே போல இவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதும் வழங்கப்பட்டது. திருநங்கை ஒரு வருக்கு இத்தகைய உயரிய விருது வழங்கப்பட்டது அதுவே முதல்முறை.