பொதுமக்கள் குறைகளை கேட்ப தற்கான நேரடி முகாம் (ஜனதா தர்பார்) இனி நடத்தப்பட மாட்டாது என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் திங்கள்கிழமை செய்தியாளர் களிடம் கூறுகையில், "பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதற் கான ஜனதா தர்பார் இனி நடத்தப்பட மாட்டாது. மாறாக பொது மக்களின் புகார் மனுக்கள் இணையத்தளங்கள் வழியாக பெற்றுக் கொள்ளப்படும். இதற் கென தனியாக ஒரு இணைய தளம் விரைவில் தொடங்கப்படும். இதுதவிர, வாரத்தில் ஒரு நாள் முதல்வர் அலுவலகத்தில் என்னை பொதுமக்கள் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
மேலும் புகார்களைப் பெற கால் சென்டர்கள் அமைக்கப்படும் எனவும் தபால் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம் எனவும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
கேஜ்ரிவால் டெல்லி முதல் வராக பொறுப்பேற்றதும் டெல்லி வாசிகளின் குறைகளை நேரடி யாகக் கேட்டு, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக ஜனதா தர்பார் நடத்தப்படும் என கூறியிருந்தார்.
இதன்படி, கடந்த சனிக்கிழமை முதன் முறையாக நடைபெற்ற மக்கள் தர்பார் நிகழ்ச்சியின்போது, பல்லாயிரக் கணக்கானோர் குவிந்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது.
கூட்ட நெரிசல் அதிமானதால், அசம்பாவிதம் நடப்பதைத் தவிர்ப்பதற்காக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்க வேண் டியதாயிற்று. இதை வேறொரு நாளில் திட்டமிட்டு நடத்துவதாகக் கூறியிருந்த கேஜ்ரிவால், இப்போது அதை ரத்து செய்துள்ளார்.