தமிழகத்துக்கு காவிரியில் கூடுத லாக தண்ணீர் திறக்க உச்ச நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.
வன்முறையைக் கட்டுப்படுத்து வதற்காக, பெங்களூருவில் உள்ள ஹெங்கனஹள்ளி பகுதியில் போலீ ஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
வன்முறை பரவாமல் தடுப்பதற் காக முதலில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மைசூருவிலும் வன்முறை வெடித்தது. முதல்வரின் வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மைசூருவிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜ்நாத் சிங் ஆலோசனை
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரவு கர்நாடக முதல்வர் சித்த ராமைய்யாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுபோல தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இரு மாநிலங்களிலும் ஏற்பட் டுள்ள வன்முறை குறித்து கேட் டறிந்தார். அப்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.