மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜிவ் ராய் பட்நாகர் நியமிக்கப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப். வீர்கள் கொல்லப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தச் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநராக ராஜிவ் ராய் பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 1983-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானவர். முன்னதாக, சி..ஆர்.பி.எப். இயக்குநராக இருந்த கே.துர்கா பிரசாத், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பணியிடம் காலியாக இருந்தது.
இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே. பச்நந்தா ஏற்கனவே நியமிகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.