இந்தியா

கர்நாடகாவில் அரசு அலுவலகத்தில் பெண்ணை தாக்கிய சக ஊழியர் கைது

இரா.வினோத்

கர்நாடகாவில் அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியரை கடுமையாக தாக்கிய சக ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரெய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் நகராட்சி அலுவலகத்தில் நஸ்ரின் பானு (30) நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இதே அலு வலகத்தில் சரணப்பா (28) ஒப்பந்த ஊழியராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில் கடந்த 10-ம் தேதி நஸ்ரின் பானுவுக்கும், சரணப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த சரணப்பா, நஸ்ரின் பானுவை எட்டி உதைத்து, கடுமையாக தாக்கி யுள்ளார். இதுகுறித்து நஸ்ரின் பானு சிந்தனூர் காவல் நிலையத் தில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரணப்பாவை கைது செய்தனர். ரெய்ச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சரணப்பா நேற்று மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.

இது தொடர்பாக சிந்தனூர் நகராட்சி அதிகாரி நஞ்சப்பா கூறும்போது, “இந்த சம்பவம் நடந்த அன்று (சனிக்கிழமை), அலுவலகத்துக்கு விடுமுறையாக இருந்த போதிலும், கிடப்பில் இருக்கும் பணிகளை முடிப்பதற் காக இருவரும் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது நஸ்ரின் பானு தாமதமாக வந்ததால் சரணப்பா அவருடன் சண்டையிட்டுள்ளார்.

எனவே சரணப்பா உடனடி யாக பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே சரணப்பா நஸ்ரின் பானுவைத் தாக்கிய சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான தால், ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல இஸ்லாமிய அமைப் பினரும் மகளிர் அமைப்பினரும் சரணப்பாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிந்தனூர் நகராட்சி அலுவலகத்தில் நஸ்ரின் பானுவை சரணப்பா தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி.

SCROLL FOR NEXT