இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் வாரன்ட் உத்தரவை நீதிபதி கர்ணன் ஏற்க மறுப்பு

செய்திப்பிரிவு

தனக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனுடன் கூடிய வாரன்ட் உத்தரவை நீதிபதி கர்ணன் ஏற்க மறுத்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு ஜாமீன் அனுமதியுடன் வாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வாரண்ட் உத்தரவை ஏற்க மறுத்துள்ளார் சி.எஸ். கர்ணன்.

வெள்ளியன்று மாநில போலீஸ் உயரதிகாரி, டிஜிபி சுரஜித் கர் புர்கயஸ்தா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு வாரன்டை நீதிபதி கர்ணனிடம் கையளிக்க அவரது இல்லத்திற்குச் சென்றனர்.

“ஆனால் அவர் அதை வாங்க மறுத்தார்’ என்று நீதிபதியின் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் தெரிவித்தார்.

“மேற்கு வங்க மாநில டிஜிபி, குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபி, தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரி ஆகியோருடன் 20 பேர் கொண்ட குழு இன்று நீதிபதி கர்ணன் இல்லத்திற்கு வந்து உச்ச நீதிமன்ற வாரண்ட் உத்தரவை அளிக்க முயன்றனர், ஆனால் கர்ணன் அதை வாங்க மறுத்தார்” என்று வழக்கறிஞர் ரமேஷ் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.

ஆனால் ஏடிஜிபி ராஜேஷ் குமார் கூறும்போது நீதிபதி கர்ணன் வாரன்ட்டை ஏற்றுக் கொண்டார் என்றார்.

தற்போது பதவியிலிருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் சி.எஸ்.கரணன், இதனால் உச்ச நீதிமன்றம் இவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த் கோர்ட்டில் ஆஜராக வழிசெய்யுமாறு ஜாமீனுடன் கூடிய வாரன்ட் உத்தரவை பிறப்பித்து அதை மேற்கு வங்க டிஜிபி கர்ணனிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே கர்ணன் வாரன்ட்டை ஏற்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT