இந்தியா

2ஜி: ராசா, கனிமொழியிடம் மார்ச் 3-ல் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை மார்ச் 3-ம் தேதி பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் விசா ரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைத்தார். முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர்களும் கூடுதல் கால அவகாசம் கோரினர்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி கடந்த நவம்பர் 27-ம் தேதி முடிவடைந்தது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, அவரின் மனைவி டினா அம்பானி, அரசியல் தரகர் நீரா ராடியா, அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி உள்பட 153 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT