இந்தியா

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் இல்லை: பாஜக-சிவசேனா உறவில் விரிசல் அதிகரிக்க வாய்ப்பு

பிடிஐ

மத்திய அமைச்சரவை விரிவாக்கத் தின்போது சிவசேனா கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படாததால், பாஜக-சிவசேனா இடையிலான உறவில் ஏற்பட்டிருந்த விரிசல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் 2 கூட்டணிக் கட்சி எம்பிக் களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட் டது. எனினும், நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் நீடிக்கும் சிவ சேனாவுக்கு இடம் வழங்கப்பட வில்லை.

இதுகுறித்து சிவேசனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷா கயாந்தே நேற்று கூறியதாவது:

மத்திய அமைச்சரவையில் கூடுதல் இடம் வேண்டி பாஜகவிடம் பிச்சை எடுக்கக்கூடாது என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. எங்கள் கோரிக்கையை ஏற்று பெருந்தன்மையுடன் அமைச் சரவையில் இடம் வழங்கி இருந் தால் நன்றாக இருந்திருக்கும். அமைச்சரவையில் எங்களுக்கு இடம்தேவையில்லை. மாறாக அவர்களிடம் வைப்பதற்கு வேறு சில கோரிக்கைகள் உள்ளன.

திறமையான எம்பிக்களை அமைச்சரவையில் சேர்க்கப்போவ தாக பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் எங்கள் கட்சியினருக்கு யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. அப்படியானால் திறமையானவர் கள் சிவசேனா கட்சியில் இல்லையா? மோடியின் இந்த நடவடிக்கை எங்களை காயப் படுத்தி உள்ளது.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் இதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை விரி வாக்கம் பற்றி சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் கூறும்போது, “அமைச் சரவை விரிவாக்கம் பற்றி பாஜக தலைமை எங்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை” என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரவையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆனந்த கீதே ஒருவர் மட்டுமே அமைச்சராக உள்ளார். நீண்டகால நண்பர்களான பாஜகவும் சிவ சேனாவும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்தனி யாக போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத தால் சிவசேனா ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனாலும் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT