இந்தியா

தேவைப்பட்டால் பலத்தை வெளிப்படுத்துவோம்: புதிய ராணுவ தளபதி பிபின் ராவத் பேட்டி

பிடிஐ

எல்லையில் அமைதியை நிலை நிறுத்த வேண்டியதே ராணுவத்தின் பணியாக இருக்கும். அதே சமயம், தேவைப்பட்டால் ராணுவம் தனது பலத்தை வெளிப்படுத்தவும் தயங்காது என, புதிய ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

27-வது ராணுவத் தளபதியாக பிபின் ராவத் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். டெல்லி் சவுத் பிளாக்கில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றப்பிறகு செய்தியாளர்களிடம் ராவத் கூறியதாவது:

நமது நாட்டு எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் புனிதத் தன் மையை நிலை நிறுத்துவதே ராணு வத்தின் குறிக்கோள். உள்நாட்டு சட்டம் ஒழுங்கு நிலவரத்தை உறுதி செய்ய அவசியப்படும்போது, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பதும் நமது கடமை.

அமைதி மற்றும் சமாதானத் தையே நமது நாடும், ராணுவமும் விரும்புகிறது. அதனால் நாம் பலவீனமானவர்கள் என்பது அர்த்தமல்ல. எந்த வகையிலும் நாம் சக்திவாய்ந்தவர்கள், ஆற்றல் மிக்கவர்கள். நமது ராணுவ பலத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்காக தயங்க மாட்டோம். ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும், சேவைகளும் ஒன்றிணைந்தே செயல்படுகின்றன. எல்லா வற்றையும் ஒரே பிரிவாகத்தான் நான் கருதுவேன்.

ராணுவத்தின் கிழக்குப் பகுதி கமாண்டர் பிரவீன் பக் ஷி மற்றும் தெற்கு பகுதி கமாண்டர் பி.எம்.ஹாரிஸ் ஆகியோர் ராணுவப் பணியில் தொடர்ந்து நீடிப் பார்கள். ஒற்றுமையுடன் தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூத்த அதிகாரிகளான பிரவீன் பக் ஷி மற்றும் ஹாரிஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ராணுவத் தலைமைத் தளபதியாக ராவத் அறிவிக்கப்பட்டார். தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல், மேற்கே நடக்கும் மறைமுக யுத்தம், வடகிழக்கில் அமைதியற்ற சூழல் என தற்போது நிலவும் சவாலான சூழலை எதிர்கொள்ள ராவத் பொருத்தமானவர் என அரசு தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இதனால், அதிருப்தியடைந்த மூத்த அதிகாரிகள் விருப்ப ஓய்வின் பேரில் பணியில் இருந்து விலகுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு வெளியான தகவல்கள் தவறா னவை என்றும், புதிய தளபதிக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி, தொடர்ந்து கடமையாற்றுவதாக, நேற்று முன்தினம் பக்்ஷி அறிவித்தார்.

SCROLL FOR NEXT